search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டமளிப்பு விழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
    • பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

    பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.

    தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.

    பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.

    உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

    பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். முதல்வர் சதக்கத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை பண்பாடு சமூக நெறி மற்றும் பாரம்பரியத்தை காக்க உறுதி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின் மொழிந்தனர்.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் 926 இளங்கலை மாணவ,மாணவிகளுக்கு 70 முதுகலை மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் செய்திருந்தனர்.விழாவிற்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், முகமது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் சர்மிளா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 5 வகுப்பு படித்து முடித்து மேல் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.
    • 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை கலந்து கொண்ட

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தேவசானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் சூளகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர்கள் ராஜசேகர், ஜெசன்நாதன் மற்றும் தலைமை உதவி ஆசிரியர் உமா மஹேஸ்வரி, சுபாஷினி, ஜெயந்தி, ஜான்சிராணி, முனிராஜ், சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் 5 வகுப்பு படித்து முடித்து மேல் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.

    கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தபடும் நிலையில் 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை கலந்து கொண்ட பெற்றோர்கள் பாராட்டினர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா செய்திருந்தார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.
    • வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று பேசினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு 2020-21, 2021-22-ம் கல்வியாண்டில் படித்த

    600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    கல்லூரிகளில் நான் வைக்கும் கோரிக்கை நன்றாக படியுங்கள். அதிக மாக புத்தகங்களை படியுங்கள் என்பதுதான். வரலாற்று புத்தகம், நல்ல புத்தகங்களை தேடி தேடி படியுங்கள். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் வாழ்க்கை முறை தெளிவாகும். வீட்டி லும், வேலை நேரத்திலும் புத்தகங்களை படியுங்கள்.

    தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக்கொண்டால் மிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும். பாரதி பல மொழிகளை கற்றுக் கொண்டுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார்.

    நானும் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்கும் நிலை உங்களி டம் இருக்க வேண்டும்.

    வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டும் தொலைத்து விடாதீர்கள். மாணவ செல்வங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

    யோகா பயிற்சியை தினமும் செய்தால் இன்று வாங்கிய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறலாம். யோகா செய்தால் மனம் ஒருநிலைப்படும். யோகா செய்யாத நாள் இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும். நாளை முதல் சின்ன சின்ன யோகாவை செய்ய முயற்சியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேராசிரியர் ராம.சீனிவாசன் பங்கேற்றனர். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, தலைமை அதிகாரி, செயலாளர் ஷகிலா ஷா முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    முடிவில் முதல்வர் வெண்ணிலா நன்றி கூறினார். முன்னாள் முதல்வர் நவராஜ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • எஸ்.எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஜி. பழம்ரவி பங்கேற்று பேசினார். 2017 முதல் 2020 வரை இந்த கல்லூரியில் 5 துறைகளில் படித்த சுமார் 450 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தாளாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு துறை செயலாளர் நாராயணன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
    • கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலைநிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாடு கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பி.எச்டி படிப்பு முடித்த 302 பேருக்கும், 490 எம்.பில், 119 முதுகலை மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், 257 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். மொத்தம் 10 ஆயிரத்து 840 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.

    அப்போது கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் அளிக்கப்பட்ட பட்டங்களுக்கு கவர்னர் அதிகாரம் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    • அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் எம்.எஸ்.ஷா , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் வெண்ணிலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பேராசிரியர் ராம சீனிவசான் சிறப்புரை யாற்றுகிறார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    • இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். இந்த நாட்டின் தூண்கள்.
    • குழந்தைகளுக்கு எவ்வாறு ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் அளிக்க வேண்டும் என்றும், செயல் வழி கற்றல் பற்றியும் எடுத்து கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    இந்த பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கேற்றி வரவேற்று பேசினார். விழாவில் பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசும் போது இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். இந்த நாட்டின் தூண்கள். மாணவர்கள் அறிவியல் மேதைகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், மாவட்ட கலெக்டர்களாகவும் இந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    மேலும் பள்ளியில் படிக்கும் கிண்டர்கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவின் முடிவில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் குழந்தைகளுக்கு எவ்வாறு ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் அளிக்க வேண்டும் என்றும், செயல் வழி கற்றல் பற்றியும் எடுத்து கூறினார். விழாவின் முடிவில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர்பாஷா செய்திருந்தார்.

    • பரமக்குடி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • இளைஞர்கள் தங்களுக்குள் லட்சியத்தை வளர்க்க வேண்டும் துணைவேந்தர் பேசினார்.

    பரமக்குடி

    பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 20, 21 மற்றும் 22-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை தாங்கினார்.

    முதல் நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 600 மாணவர்களுக்கு பட்டங் களை அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ரவி வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பட்டப்படிப்பு என்பது கடினமான பயணத்தின் முடிவல்ல, ஆனால் பிரகாச மான எதிர்காலத்திற்கான வாக்குறுதிகளுடன் கூடிய அழகான பயணத்தின் ஆரம்பம்.

    பெரிய உலகிற்கு அடி யெடுத்து வைக்கும் போது, சமுதாயம் மற்றும் தேசத்தின் நன்மைக்காக உழைக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் கள் தியாகத்தால் நீங்கள் பட்டதாரி ஆகி உள்ளீர்கள்.

    மனித வாழ்வில் அடை யும் நீண்ட செயல்பா ட்டின் முதல் படி இலக்கை நிர்ண யித்தல். இலக்கை நிர்ண யித்த பிறகு, இளைஞர்கள் தன்னம்பி க்கையின் நேர் மறையான லட்சியத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2-வது நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மத்திய கருவி மற்றும் சேவை ஆய்வக இயற்பியல் துறை யின் தலைவர் நெடுமாறன் கலந்து கொண்டு 1200 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    • பட்டமளிப்பு விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார்.
    • மாணவி ரிதன்யா தலைமையில் அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    பட்டமளிப்பு விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி கணபதி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.

    அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி திருமால் முருகன் யுகேஜி முடித்து ஒன்றாம் வகுப்பு செல்லும் 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    முன்னதாக மாணவி ஜீவந்திகா வரவேற்புரை ஆற்றினார். மாணவர் எஸ்வந்த் மற்றும் கவினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    மாணவி ரிதன்யா தலைமையில் அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிகேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர், மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர்கள் சம்ரிதா மற்றும் கவின்யாதவ் ஆகிய இருவரும் நன்றி கூறினர். மழலையர் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவரும் பாரத சாரண மாணவர்களின் பேண்ட் இசையுடன் விழா மேடையில் இருந்து ஒன்றாம் வகுப்பிற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஒன்றாம் வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களை பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

    • இரண்டாம் ஆண்டு மழலையர் கல்வி முடித்த மாணவர்களுக்கு பட்டங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.
    • 100 சதவீதம் சதவீத தேர்ச்சி, கையெழுத்து, ஒழுக்கம், ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்க ளும் வழங்கப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 16-ம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஸ்டான்லி கல்வி குழுமங்களின் செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.வேல்நம்பி அன்பரசி சுந்தரம் மற்றும் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பிரபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இரண்டாம் ஆண்டு மழலையர் கல்வி முடித்த மாணவர்களுக்கு பட்டங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் சதவீத தேர்ச்சி, கையெழுத்து, ஒழுக்கம், ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்க ளும் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் பரிசு பெற உறுதுணையாக இருந்த பெற்றோர்களும் கவுரவப்படுத்தப்பட்டனர். பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்ட இவ்விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

    • செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதம் மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் பழனிச்சாமி 821 இளங்கலை பட்டம் முடித்த மாணவ- மாணவிகளுக்கும், 89 முதுகலை பட்டம் முடித்த மாணவ மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.

    செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பி னர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.அழகப்பா பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    இதேபோல் பல்கலைக்கழக அளவில் முதல் 10 ரேங்குக்குள் பெற்ற 52 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழா ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.

    ×